பாளையில் இன்று அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணன் அளித்த பேட்டியில், திமுகவில் இணைந்துள்ள மனோஜ் பாண்டியன் அதிமுகவை குறை கூறுவதற்கு தகுதி இல்லை என்று தெரிவித்தார். அவரது குடும்பம் 50 ஆண்டுகளாக அதிமுகவால் பதவி சுகம் அனுபவித்ததாகவும், அதிமுக பிளவுக்கு மனோஜ் பாண்டியனே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார். மனோஜ் பாண்டியன் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து போட்டியிட தான் தயார் என்றும் அவர் கூறினார்.