வள்ளியூர் குப்பை கிடங்கில் தீ விபத்து

வள்ளியூர் ராஜரத்தினம் நகர் அருகே செயல்பட்டு வரும் குப்பை கிடங்கில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வள்ளியூர் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்படும் நிலையில், தீ விபத்தால் அப்பகுதியில் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. வள்ளியூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மின்னல் வேகத்தில் தீ பரவியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி