நெல்லை: போக்சோ வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டு சிறை

நெல்லையில் 2021ல் 5 மற்றும் 6 வயது சிறுமிகளிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக 72 வயது சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் மகளிர் போலீஸார் அவரை கைது செய்தனர். நேற்று, மாவட்ட போக்சோ நீதிபதி சுரேஷ் குமார், சுப்பிரமணியனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 2,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி