நாங்குநேரி அருகே பெரும்பத்து மற்றும் புளியங்குளம் பகுதியில், காரணமே இன்றி அப்பாவி மக்கள் மீது மர்ம கும்பல் நடத்திய வெட்டு தாக்குதலில் ஜான் உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கண்மூடித்தனமான தாக்குதலில் காயமடைந்த நெல்சன், பிரபாகரன், ராமசாமி, சசிகுமார், கணேசன் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் நெல்சன் மற்றும் கணேசன் இருவரும் பாளை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.