வள்ளியூரில் நேற்று முன்னாள் சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டியில், விஜய் ரூட் என்ற அமைப்பு மூலம் ரூ. 300 கோடி செலவு செய்து உண்மைக்கு புறம்பான தகவலை பரப்பி மக்களிடம் வாக்குகளை பெற்றுள்ளதாக குற்றம் சாட்டினார். திமுக ஆட்சியில் ஒரு பெண் இறந்தபோது முதலமைச்சர் அந்த பெண்ணின் உயிரை திரும்ப தர முடியுமா என விஜய் கேட்டதை சுட்டிக்காட்டி, தற்போது கோவையில் சிறுமி இறந்ததற்கு முதலமைச்சர் பொறுப்பேற்று அவரது உயிரை மீட்டு தர முடியுமா என அப்பாவு ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.