கட்சி மாறியவருக்கு பதவி; பாஜகவில் அதிர்ச்சி

பாளை தொகுதி முன்னாள் எம்எல்ஏ குருநாதன், மதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்திருந்தார். கடந்த நவம்பர் 26 அன்று பாஜகவிலிருந்து விலகிய அவர், மீண்டும் மதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிலையில், மதிமுகவில் இணைந்து இரண்டு நாட்கள் கழித்து, நவம்பர் 28 அன்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட புதிய நிர்வாகிகள் பட்டியலில், குருநாதனுக்கு 'பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர்' பதவி வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி