காரில் போதை பொருள் எடுத்து சென்ற 5 பேர் கைது

நாங்குநேரி போலீசார் இன்று வாகைகுளம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டபோது, ஐயப்பன் (39), முருகன் (44), இசக்கித்துரை (24), வானுமாமலை (41), செல்லத்துரை (46) ஆகியோரை காரில் சந்தேகத்திற்கிடமான முறையில் கண்டனர். காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 49 கிலோ புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி