குமரி: மின்னல் தாக்கி பற்றி எரிந்த தென்னை மரம்; வீடியோ

கன்னியாகுமரி மாவட்டம் உட்பட தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இடி மின்னலுடன் கனமழையும் பெய்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையால் தாழ்வான சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் இடி மின்னலுடன் பெய்த மழையின்போது, மின்னல் தாக்கி தென்னை மரத்தின் உச்சியில் தீ பற்றி எரிந்தது. இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் அப்பகுதியினரும் எடுத்த வீடியோ பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இக்காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி