குமரி: 3 பைக்குகள் மோதல்.. சிறுவன் உட்பட 4 பேர் காயம்

வெள்ளிசந்தை அருகே அழிக்கால் பகுதியை சேர்ந்தவர் சகாயம் மகன் சகாய அனிஷ் (29). மீன்பிடித் தொழிலாளி. தற்போது கன்னியாகுமரி வட்டக்கரை வடக்கு கோவில் தெரு பகுதியில் வசித்து வருகிறார். நேற்று சகாய அனிஷ் கருங்கல் செல்வதற்காக வட்டக்கரையிலிருந்து பைக்கில் புறப்பட்டு சென்றார். அதேபோல் நாகர்கோவில் பகுதி சேர்ந்த தாணுமாலையன் (36) என்பவர் தனது மனைவி ஜெகதீஸ்வரி (30) மற்றும் 6 வயது ஆண் குழந்தையுடன் அதே பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். 

இவரது பைக் அம்மாண்டி விளை பகுதியில் சென்றபோது எதிரே கூடங்குளம் பகுதியில் வேலை பார்த்து வரும் முத்துக்குமார் (25) என்பவர் ஓட்டிவந்த பைக் அடுத்தடுத்து இரண்டு பைக்குகள் மீதும் மோதியது. இந்த விபத்தில் 3 பைக்குகளில் வந்த அனைவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் சகாய அனிஷ் மீட்கப்பட்டு சுசீந்திரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

லேசான காயமடைந்த தாணுமாலையன், மனைவி ஜெகதீஸ்வரி, ஆறு வயது சிறுவன் ஆகியோர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த விபத்தில் முத்துக்குமார் காயமின்றி தப்பினார். இதுகுறித்து சகாய அனிஷ் அளித்த புகார் மீது விபத்து ஏற்படுத்திய முத்துக்குமார் மீது மனவளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி