தூத்துக்குடி: பைக் மீது ஜீப் மோதி விபத்து

கயத்தாறு அருகே மோட்டார் பைக் மீது ஜீப் மோதிய விபத்தில் மாட்டு வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள சிதம்பரபுரம் மேட்டு தெருவை சேர்ந்த விவசாயி வீரபுத்திரத்தேவர் மகன் சுந்தரம் (63), இவர் கயத்தாரில் இருந்து வடக்கு இலந்தை குலத்திற்கு மோட்டார் பைக்கில் வியாபாரத்திற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது விருதுநகரில் இருந்து புளியம்பட்டி நோக்கி சென்ற ஜீப், அவரது மோட்டார் பைக் மீது மோதியது. 

இதில் பலத்த காயம் அடைந்த சுந்தரம் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சுந்தரத்திற்கு, முருகானந்தம் என்ற மனைவியும், செல்வகுமார் என்ற மகனும் உள்ளனர். விபத்து குறித்து கயத்தாறு சப்-இன்ஸ்பெக்டர் காசிலிங்கம் வழக்கு பதிவு செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் சுதாதேவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி