கொல்லங்கோடு: திருமண வீட்டில் தீக்குளித்தவர் மரணம்; மகன் காயம்

கொல்லங்கோடு அருகே உள்ள சூசைபுரம் காலனியை சேர்ந்தவர் சாலமன் (53) மீன்பிடித் தொழிலாளி குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவி குழந்தைகளைப் பிரிந்து வாடகை வீட்டில் சாலமன் வசித்து வந்தார். 

இந்த நிலையில் சாலமனின் மகன் சர்ஜினுக்கும் உறவுப் பெண்ணுக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. திருமணம் நடக்க இருந்த நிலையில் சாலமன் வீட்டுக்குச் சென்று பிரச்சினையில் ஈடுபட்டு பெட்ரோலை ஊற்றித் தீக்குளித்தார். அவரது மற்றொரு மகன் சஜித் தந்தையைக் காப்பாற்ற முயன்றார். 

இதில் சாலமன், சஜித் இருவரும் தீக்காயம் அடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதில் சாலமன் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார். கொல்லங்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்தி