இதையடுத்து போலீசார் இருவரையும் பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கொல்லங்கோடு அருகே உள்ள கேரள பகுதியான தெற்கே கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் மகன் நோபல் (22) மற்றும் சூசைபுரம் பகுதி சேர்ந்த மிஜின் (19) என்பது தெரிய வந்தது.
நோபல் ஐடிஐ முடித்துவிட்டு மீன் பிடித்தொழில் செய்து வருவதாகவும், மிஜின் களியக்காளை அருகே ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதாக தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 40 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக கொல்லங்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து இரண்டு வாலிபர்களையும் கைது செய்தனர்.