இதையடுத்து ஊர் தலைவர் செல்லப்பன் தலைமையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பொதுமக்கள் ஏராளமானோர் அந்த கடை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பா. ஜனதா முன்னாள் மாவட்ட தலைவர் வேல் பாண்டியன், மாவட்ட பொதுச்செயலாளர் ஜெகநாதன், நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் ஜவான். டி. அய்யப்பன், புத்தளம் பேரூராட்சி அ. தி. மு. க. கவுன்சிலர்கள் விஜயன், சிவ கந்தன், பா. ஜனதா கவுன்சிலர்கள் ஸ்ரீதேவி, தனலிங்கவல்லி, விஜயகல்யாணி, ராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றிய தலைவர் ராஜேஷ், புத்தளம் பேரூர் தலைவர் இலந்திளை மதன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு கோஷம் எழுப்பினர்.
போராட்டம் நடத்தியவர்களிடம் சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் ஆதம் அலி பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் டாஸ்மாக் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் டாஸ்மாக் கடையை திறக்க மாட்டோம் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தை யொட்டி அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.