முக்கூடலில் பவர் சங்கீதா என்பவரது வீட்டில் சுமார் 12 கிலோ கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் நேற்று கண்டுபிடித்தனர். இதையடுத்து பவர் சங்கீதா, ஆர்த்தி, ரசூல் பாத்திமா, விஜயா, மும்பையைச் சேர்ந்த ஜெய் பூர்நிஷா, குஜராத்தைச் சேர்ந்த சௌந்தரபாண்டியன், வீரவநல்லூரைச் சேர்ந்த இசக்கிமுத்து என 7 பேர் முக்கூடல் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.