நெல்லை: கணவனால் வெட்டப்பட்ட மனைவி பலி

பேட்டையை சேர்ந்த பாஸ்கர் கஞ்சா வியாபாரி என கூறப்படுகிறது. இவர் தனது மனைவி இசக்கியம்மாளுடன் ஏற்பட்ட தகராறில் கடந்த 10ம் தேதி மனைவியை அரிவாளால் வெட்டினார். பலத்த காயத்துடன் இசக்கியம்மாள் மாநில அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார். போலீசார் பாஸ்கரை ஏற்கனவே கைது செய்த நிலையில் வழக்கை கொலை வழக்காக மாற்ற உள்ளனர்.

தொடர்புடைய செய்தி