நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள வடக்கு அரியநாயகிபுரத்தில் ஸ்ரீ அரியநாயகி அம்மை உடனாகிய கைலாசநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. மிகவும் பழமைவாய்ந்த இக்கோயிலில் தைப்பூசப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மூன்றாம் திருநாளான நேற்று இரவு அம்மை சிம்ம வாகனத்தில் எழுந்தருளல் நடைபெற்றது. திரளானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.