கேட் மூடாததால் திடீரென நிறுத்தப்பட்ட ரயில்

சேரன்மகாதேவி ரயில் நிலையம் அருகே நேற்று இரவு ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததால் மதுரை செங்கோட்டை சிறப்பு ரயில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. கேட் கீப்பர் இல்லாததால் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. மாற்று ஊழியர் வந்த பிறகே ரயில் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி