நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே பத்தமடை அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் அஷ்ரப் அலி ஏற்பாட்டில், கரிசல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக புகையிலை தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவர் அம்பிகாவதி, ஆய்வாளர் கிப்ஸன், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்துகொண்டனர். புகையிலைப் பழக்கத்தை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக இருந்தது.