திருநெல்வேலி: 6 வயது சிறுவன் மீது பாலியல் தாக்குதல்; முதியவருக்கு ஆயுள்

திருநெல்வேலி மாவட்டத்தில் 2023-ல் 6 வயது சிறுவனிடம் பாலியல் தாக்குதல் நடத்திய நமச்சிவாயம் (65) என்பவருக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ரூ.3 லட்சம் நிவாரணத் தொகையும் வழங்க நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டார். போக்சோ வழக்குகளில் இதுவரை இரண்டு வழக்குகளில் ஒருவருக்கு மரண தண்டனையும், நமச்சிவாயத்திற்கு ஆயுள் தண்டனையும் பெற்றுத் தரப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி