கல்லிடைக்குறிச்சியில் நேற்று இரவு நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் ராமசுப்பிரமணியன், "நான் 24 மணி நேரமும் உங்களுக்காக பணியாற்றுவேன். துரோகி இசக்கி சுப்பையாவுக்கு சங்கு ஊதும் காலம் வந்துவிட்டது. அம்பை தொகுதியில் மீண்டும் தீய சக்தி வெற்றி பெற கூடாது" என ஆவேசமாக பேசினார். அம்பையில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று பின்னர் தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையாவை அவர் மறைமுகமாக விமர்சித்தார்.