பழையப் பேட்டை லாலுகாபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இன்று தமிழக அரசின் விலையில்லா பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. முன்னாள் மேயரும் கவுன்சிலருமான சரவணன் மாணவ மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கினார். உடன் பள்ளி தலைமை ஆசிரியர் ராசாத்தி, திமுக வட்டச் செயலாளர் லெனின் உள்பட பலர் உள்ளனர்.