நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் 115 அரங்குகளுடன் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒன்பதாவது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா வரும் 12ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேதி மாற்றம் செய்யப்பட்டு புத்தகத் திருவிழா வரும் 10ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. இந்த புத்தகத் திருவிழாவில் பல்வேறு தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.