நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி ரயில்வே கேட் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். உடனடியாக இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். சாலையின் அவல நிலை வாகன ஓட்டிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.