பாளை பகுதியில் நேற்றிரவு (ஜனவரி 21) நடந்த திமுக கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி பேசுகையில், திமுகவை பற்றி சிலர் ஏதேதோ பேசுகிறார்கள் நேற்று முளைத்தவர்கள் கூட பேசுகிறார்கள். நடிகர் விஜய்யின் அப்பாவையும் நாங்கள் தான் அறிமுகம் செய்தோம். அவர் தான் இன்று நமக்கு சவால் விடுகிறார். ஒன்று மட்டும் சொல்கிறேன் திமுகவை எதிர்த்தவர்கள் வாழ்ந்ததாகவும் இல்லை நிலைத்ததாகவும் இல்லை. பழைய வரலாறு நிறைய இருக்கிறது என பேசினார்.