சிவந்திபுரம் அடுத்த விகே. புரம் கோட்டைவிளைப்பட்டியில் உள்ள கிணறு அருகே சுமார் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று கோழியை உயிருடன் விழுங்கி கொண்டிருந்ததை மக்கள் கண்டனர். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து அந்த மலைப்பாம்பை லாவகமாகப் பிடித்து அடர் வனப்பகுதிக்குள் விட்டனர். மேலும், இந்த பாம்பு இதற்கு முன்பும் 10-க்கும் மேற்பட்ட கோழிகளை விழுங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.