நெல்லை பர்கிட் மாநகரம் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரது மகன் விக்னேஷ் தேனி அரசு பொறியியல் கல்லூரியில் பயின்று வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்தார். இறப்பில் சந்தேகம் இருப்பதாக நீதி கேட்டு குடும்பத்தினர் போராடி வருகின்றனர். இந்த நிலையில் இன்று நெல்லை பர்கிட் மாநகரில் விக்னேஷ் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வீட்டு முன் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள்.