பாளை தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவனை சக மாணவன் அரிவாளால் வெட்டியது குறித்து பாளை உதவி ஆணையர் சுரேஷ் அளித்த பேட்டியில், பென்சில் கேட்டதில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே மாணவன் அரிவாளால் வெட்டியுள்ளான். மூன்று இடத்தில் வெட்டு ஏற்பட்ட மாணவனுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. தடுக்க சென்ற ஆசிரியருக்கும் லேசான வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நலமுடன் உள்ளனர் என்றார்.