பாபநாசம் அருகே வனப்பகுதியில் அமைந்துள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் திருக்கோயிலில், ஐயப்ப சீசன் காரணமாக அதிகளவு பக்தர்கள் வந்து செல்கின்றனர். வனப்பகுதி என்பதால் அங்கு பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பக்தர்கள் விட்டுச் சென்ற பிளாஸ்டிக் கழிவுகளை வனத்துறையினர் இன்று அகற்றி சுத்தம் செய்தனர். ஒரே நாளில் சுமார் 530 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் கோயிலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.