தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் அன்னை நல்வாழ்வு முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக 4 பேர் நேற்று உயிரிழந்தனர். இந்த நிலையில், தென்காசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 பேர் தற்போது மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.