திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று(நவ.18) மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (நவ.18) மேற்கு அல்லது வடமேற்கு திசையில் நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.