அம்பை: படமெடுத்த பாம்பை அசால்ட்டாக தூக்கிய முதியவர்

அம்பை அடுத்த கோட்டாரங்குளம் பகுதியில் இன்று சுமார் 6 அடி நீளமுள்ள நல்லபாம்பு ஒன்று சுற்றி திரிந்ததை அப்பகுதி மக்கள் வேடிக்கை பார்த்தனர். இந்நிலையில், ஒரு முதியவர் திடீரென அசால்ட்டாக அந்த நல்லபாம்பை லாவகமாக பிடித்து தூக்கினார். இதனால் அங்கிருந்தவர்கள் பீதியடைந்தனர். பின்னர் அவர் பாம்பை சாலை அருகே கொண்டு விட்டார், அது புதர் பகுதியில் மாயமானது.

தொடர்புடைய செய்தி