நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட கூடன்குளம் அருகே கூடு தாழையில் தூண்டில் வலையுடன் கூடிய மீன் இறங்கு தளம் அமைக்கும் பணிகளுக்கான தொடக்க விழா இன்று (ஜனவரி 29) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவரும் ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.