கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாய தேவைகளுக்கும் குடிநீர் தேவைகளுக்கும் காரையார் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 46 ஆயிரத்து 786 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலம் பயன்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. என் நிலையில் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் நகரில் வடக்கு கோடை மேலழகியன் கால்வாய் கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் திருவள்ளுவர் நகரில் குடியிருப்பு பகுதியில் செல்கிறது. உடைப்பை சரி செய்ய அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.