நெல்லை கோபால சமுத்திரப் பகுதியில் நேற்று (பிப்ரவரி 27) இரவு ஒரே நேரத்தில் 18 நாய்களுக்கு மர்ம நபர் ஒருவர் விஷம் வைத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. அந்த பகுதியில் தெரு நாய்கள் தொல்லை காரணமாக இந்த வெறிச்செயலில் அவர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாய்கள் உயிருக்கு போராடி பின்னர் பரிதாபமாக உயிரிழந்து கிடக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.