தமிழகத்தில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு நடைபெறுகிறது. நெல்லையில் குரூப்-1 தேர்வு இன்று 30 மையங்களில் நடக்கிறது. இதில் மாநகரில் 22 இடங்களிலும் மாவட்டத்தில் 8 இடங்களிலும் நடக்கிறது. டிஎஸ்பி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாளை பகுதியில் மட்டும் 10க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது தேர்வர்கள் ஆர்வமுடன் வருகை தந்துள்ளனர்.