திருநெல்வேலி சுத்தமல்லி இந்திரா காலனியில் படுகொலை செய்யப்பட்ட முத்துகிருஷ்ணனின் உடல் நான்கு நாட்களுக்குப் பிறகு அவரது உறவினர்களால் இன்று (நவம்பர் 29) திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுத்தமல்லி இந்திரா காலனிக்கு கொண்டு செல்லப்பட்டது.