அம்பை; இளைஞரை சிறுத்தை தாக்கியது

பாபநாசம் அருகே அகஸ்தியர் காணி பழங்குடியினர் குடியிருப்பைச் சேர்ந்த கௌதம் மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு சிறுத்தை வீட்டிற்குள் புகுந்து கௌதமைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. கௌதமின் கூச்சலைக் கேட்டு சிறுத்தை வனப்பகுதிக்குள் தப்பி ஓடியது. கௌதம் கையில் காயங்களுடன் அம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்தி