நெல்லை மாவட்டத்தில் கடந்த வாரம் கனமழை கொட்டிய நிலையில் தற்போது பருவமழை வலுவிழந்து காணப்படுகிறது. எனவே சமவெளி பகுதியில் மழை குறைந்து காணப்பட்டாலும் கூட மலைப்பகுதியான மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியில் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. இன்று கூட அதிகபட்சம் மாஞ்சோலையில் தான் 16 மி.மீ மழை பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.