வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நெல்லை மாநகரப் பகுதியில் இன்று (பிப்ரவரி 22) அதிகாலை திடீரென பலத்த மழை பெய்தது. குறிப்பாக டவுன் பகுதியில் சுமார் அரை மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. பகலில் மழை ஓய்ந்திருந்த நிலையில், இரவு மீண்டும் டவுன் பகுதியில் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் அரை மணி நேரம் நீடித்தது.