நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று நெல்லை மாவட்டம் அம்பை பகுதியில் பிற்பகல் வரை வெயில் தாக்கம் கடுமையாக காணப்பட்ட நிலையில் மாலை 5 மணி அளவில் திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. அம்பை சுற்றுவட்டார பகுதியில் சுமார் 20 நிமிடம் பெய்த கனமழையால் பள்ளி சென்று திரும்பிய மாணவர்கள் சிரமப்பட்டனர்.