நீலகிரி மாவட்டத்தில் பிடிபட்ட ராதாகிருஷ்ணன் என்ற காட்டு யானை, கடந்த மாதம் நெல்லை கோதையாறில் விடப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்தது. 20 அடி உயரத்தில் இருந்து வழுக்கி விழுந்ததால் யானை இறந்ததாக வனத்துறை தெரிவித்துள்ளது. முதல்முறையாக இன்று வனத்துறை இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 16ஆம் தேதி மாலை 3:30 மணிக்கு யானையிடம் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை என்றும், 19ஆம் தேதி காலை 9:30 மணிக்கு பிரேத பரிசோதனை நடைபெற்றதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.