அம்பை வனக்கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் பாபநாசம் வனச்சோதனைச்சாவடி அருகில் உள்ள கயல் கூட்ட அரங்கில் வரும் செவ்வாய் கிழமை நடைபெற உள்ளது. வனத்துறை துணை இயக்குநர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அம்பை, பாபநாசம் மற்றும் கடையம் பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு பயனடையலாம் என வனத்துறை அறிவித்துள்ளது.