தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 06) நெல்லை வருவதை ஒட்டி அவரை வரவேற்கும் விதமாக மாநகர மற்றும் மாவட்ட திமுகவினர் மாநகரில் வழி நெடுகிலும் திமுக கட்சி கொடி கட்டியுள்ளனர். முன்பெல்லாம் இது போன்று முதல்வர் வரும்போது அதிகளவு விளம்பர பேனர்கள் சாலையில் வாகன ஓட்டிகளுக்கும் இடையூராக வைக்கப்படும். ஆனால் தற்போது பேனர்களுக்கு மாற்றாக அதிகளவு கொடிக்கம்பங்கள் கட்டிருப்பது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.