நெல்லை அரசு மருத்துவமனையில் 4 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரம் குறித்து டீன் ரேவதி பாலன் இன்று (பிப்ரவரி 13) அளித்த பேட்டியில், இந்த சம்பவம் குறித்து மருத்துவர்கள் தலைமையில் உயர் மட்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. ரேடியாலஜி படிக்கும் பயிற்சி மாணவர் தான் ஊசி செலுத்தியுள்ளார். செவிலியர் உடன் இருந்துள்ளனர். மருத்துவர்கள் இல்லை என குற்றச்சாட்டை மறுக்கிறேன் என கூறினார்.