நெல்லை டவுனில் சோயா தொண்டு நிறுவனம் மாநகராட்சி உடன் இணைந்து ஆதரவற்றோர் இல்லத்தை நடத்தி வருகிறது. இந்த இல்லத்தில் வசித்து வரும் புஷ்பா(87) என்ற மூதாட்டி கடந்த 10 ஆண்டுகளாக உண்டியலில் சேர்த்து வைத்த 11 ஆயிரம் ரூபாய் பணத்தை நெல்லை தூத்துக்குடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் இன்று (டிசம்பர் 30) தமிழக அரசிடம் அந்த பணத்தை வழங்கியுள்ளார். மூதாட்டியின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.