அம்பை: கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

சேரன்மகாதேவி போலீசார் இன்று ரோந்துப் பணியின்போது, பொழிகரை அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற மாயாண்டி (19) என்பவரை சோதனை செய்தனர். அவரிடம் அரசால் தடை செய்யப்பட்ட 80 கிராம் கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி, போலீசார் அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி