அம்பை பேருந்து நிலையத்தில் இருந்து பாபநாசம் செல்லும் பிரதான சாலை குண்டும் குழியுமாக சேதமடைந்து காணப்பட்டது. சமீபத்திய மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனையடுத்து, அப்பகுதி மக்கள் இன்று தாமாக முன்வந்து பள்ளங்களில் மணல் நிரப்பி தற்காலிகமாக சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சாலையை நிரந்தரமாக சீரமைக்க அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.