நெல்லை மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று அம்பையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நெல்லை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் ஆவின் ஆறுமுகம், கணேஷ்குமார் ஆதித்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் தேர்தல் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.