அம்பாசமுத்திரம் நகராட்சியில் நேற்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பல்வேறு சேவைகளுக்காக பொதுமக்கள் விண்ணப்பித்தனர். இந்த முகாமில் மொத்தம் 32 பேர் பல்வேறு சான்றிதழ்களைக் கேட்டு விண்ணப்பித்தனர். அதில் மாலை 4 மணிக்குள் 30 சான்றிதழ்கள் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டன. மேலும் சுமார் 60 நபர்களுக்கு பட்டா ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொடுக்கப்பட்டது.