சிவந்திபுரம் அருகே தட்டான்பட்டியைச் சேர்ந்த கணபதி (66) என்ற முதியவர் நேற்று (நவ.19) அதிகாலை டீ குடிக்கச் சென்றபோது, சாலையில் கண்ட கரடி ஒன்று அவரை நோக்கிப் பாய்ந்துள்ளது. முதியவர் கணபதி தனது கையால் கரடியைத் தடுத்துள்ளார். இதில் கரடியின் நகங்கள் அவரது நெஞ்சுப் பகுதியில் கீறியுள்ளன. முதியவர் கையால் தட்டிவிட்டதும் கரடி ஓடியதால், அவர் அதிர்ஷ்டவசமாக கரடியிடமிருந்து தப்பியுள்ளார். அவர் அம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.